விவ்ராந்த் சர்மா, மயங்க் அகர்வால் அதிரடி... 200 ரன்கள் குவித்தது ஐதராபாத்


விவ்ராந்த் சர்மா, மயங்க் அகர்வால் அதிரடி... 200 ரன்கள் குவித்தது ஐதராபாத்
x

image courtesy: SunRisers Hyderabad twitter

20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.

மும்பை,

ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய ஐதராபாத்துக்கு எதிரான 69-வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதையடுத்து ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விவ்ராந்த் சர்மா, மயங்க் அகர்வால் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். விவ்ராந்த் சர்மா 47 பந்துகளில் 69 ரன்கள் (9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதேபோல் மயங்க் அகர்வால் 46 பந்துகளில் 83 ரன்கள் (8 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்து அவுட்டானார்.

தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 18 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story