உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாசிம் அக்ரம் கூறிய அறிவுரை


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாசிம் அக்ரம் கூறிய அறிவுரை
x
தினத்தந்தி 6 Jun 2023 4:47 AM IST (Updated: 6 Jun 2023 8:03 AM IST)
t-max-icont-min-icon

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன.

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்கள் புதிய பந்தை அப்படியே கொண்டு செல்லக்கூடாது. 10 முதல் 15 ஓவர்களுக்கு பந்து ஸ்விங் (swing) ஆகும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆகையால், வேகப்பந்து வீச்சாளராக முதல் 10-15 ஓவர்களுக்கு கூடுதல் ரன்கள் கொடுக்க வேண்டாம். பந்து கூடுதலாக பவுன்ஸ் ஆனால் மிகவும் மகிழ்ச்சியடைய வேண்டாம். அமைதியாக இருங்கள். ஏனென்றால் அதை தான் ஆஸ்திரேலிய வீரர்கள் விரும்புகின்றனர்.

இந்த மைதானம் எப்போதும் துணை கண்டங்களில் இருந்து வரும் நாடுகளுக்கு சாதகமாகவே இருக்கும். ஆனால், நாங்கள் இந்த மைதானத்திற்கு வரும்போது அது எப்போதும் ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாத தொடக்கமாக இருக்கும். இது ஜூன் மாதம். மைதானத்தின் எல்லைகள் வித்தியசமாக இருக்கும். புதிய எல்லைகள், பந்து வித்தியாசமானது' என்றார்.


Next Story