மிடில் ஓவர்களில் நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை - வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பவல்


மிடில் ஓவர்களில் நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை - வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பவல்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 13 Aug 2023 8:30 AM IST (Updated: 13 Aug 2023 11:20 AM IST)
t-max-icont-min-icon

மிடில் ஓவர்களில் நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் கூறியுள்ளார்.

புளோரிடா,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதில் நேற்று நடைபெற்ற 4வது போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 17 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 179 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் வெஸ்ர் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இது ஒரு நல்ல பேட்டிங் விக்கெட் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஹெட்மயர் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். உங்களுக்குத் தெரியும், எங்களிடம் தரமான பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

நாங்கள் எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை மற்றும் தரமான பேட்டர்களுக்கு பந்துவீசுவதற்கான அழுத்தத்தை உணர்ந்தோம். அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாம் எவ்வாறு பேட்டிங் செய்கிறோம் என்பதை பார்க்க வேண்டும்.

மிடில் ஓவர்களில் நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நாங்கள் முன்னேறினால், நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். இப்போதைக்கு 2-2, நாளை இறுதிப் போட்டி. இறுதிப் போட்டியில் நான் வெஸ்ட் இண்டீசை ஆதரிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story