உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது?.. தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
கொல்கத்தா,
10 அணிகள் பங்கேற்ற 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்பட 6 அணிகள் வெளியேறின.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் 2-வது அரையிறுதி ஆட்டம் நாளை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா அணியும், 3-வது இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ளது.