உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெல்லப்போவது யார் ? - டி வில்லியர்ஸ் கணிப்பு
இந்திய அணி வெல்ல வாய்ப்பு உள்ளதாக முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளனர்.
லண்டன்,
லண்டன், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
கோப்பையை எந்த அணி வெல்லும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்று வரலாறு படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல வாய்ப்பு உள்ளதாக முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளனர். ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:-
எந்த அணி என்று சொல்வது மிக கடினம். ஆனால் ஓவலில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. அதிலிருந்து கொஞ்சம் நம்பிக்கை கொள்வார்கள். பேட்டிங் செய்ய இது ஒரு நல்ல விக்கெட், ஆனால் டெஸ்ட் போட்டியின் கடைசி கட்டங்களில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.