இரட்டை சதம் அடித்தும் ஏன் 3 ஆட்டங்களில் விளையாடவில்லை ? - ரோகித் சர்மாவின் கேள்விக்கு சுவாரஸ்ய பதிலளித்த இஷான் கிஷன் - வீடியோ


இரட்டை சதம் அடித்தும் ஏன் 3 ஆட்டங்களில் விளையாடவில்லை ? - ரோகித் சர்மாவின் கேள்விக்கு சுவாரஸ்ய பதிலளித்த இஷான் கிஷன் -   வீடியோ
x

இரட்டை சதமடித்தும் அதன்பின்னர் 3 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லையே..? என்று இஷான் கிஷனிடம் ரோகித் சர்மா கேட்டார்

ஹைதராபாத்,

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 349 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை விளாசினார். அதனை தொடர்ந்து சேவாக், ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் இரட்டை சதம் அடித்திருந்தனர். இரட்டை சதம் அடித்த 5-வது இந்திய வீரராக சுப்மன் கில் உள்ளார். இந்நிலையில் போட்டிக்கு பின், இந்திய அணியின் இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா - இஷான் கிஷன் - சுப்மன் கில் ஆகிய மூவரும் கலந்துரையாடினர்.

அப்போது, இரட்டை சதமடித்தும் உனக்கு(இஷான் கிஷன்) அதன்பின்னர் 3 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லையே..? என்று இஷான் கிஷனிடம் ரோகித் சர்மா கேட்டார். அதற்கு, நீங்கதான் (ரோகித்) கேப்டன் பிரதர் என்று இஷான் கிஷன் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.


Next Story