ஹார்திக் பாண்டியா இந்திய அணியை மாற்ற விரும்புவது ஏன்? என்ன பிரச்சனை ? - முன்னாள் வீரர் கேள்விக்கு தினேஷ் கார்த்திக் நச் பதில்
, இந்திய அணிக்கு புதிய கேப்டன் பொறுப்பேற்கும் அனைவரும் விளையாடும் விதத்தை மாற்ற விரும்பவுது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
புனே,
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இளம் வீரர்களான ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர்.
இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார்.இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இறுதி ஓவரில் அக்சர் படேலைப் பய்னபடுத்தினார். மேலும் ஹர்ஷல் படேலை முதல் ஆட்டத்திற்குப் பிறகு ,ஹர்சல் படேலுக்கு பதில் அர்ஷ்தீப் சிங்கை 2வது போட்டியில் தேர்வு செய்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்விகுறித்த உரையாடலில் பேசியிருந்த முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா, இந்திய அணிக்கு பொறுப்பேற்கும் அனைவரும் இந்திய அணி விளையாடும் விதத்தை மாற்ற விரும்பவுது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது ,
" இந்திய அணிக்கு பொறுப்பேற்கும் ஒவ்வொரு கேப்டனும், குறைந்தது மூன்று வருடங்களில் இந்தியாவை பொறுத்தவரை, கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்ற போது, இந்திய அணி விளையாடும் விதத்தை மாற்ற விரும்பினார்?.
ரோஹித் சர்மா பொறுப்பேற்றார், அவர் இந்திய அணி விளையாடும் விதத்தை மாற்ற விரும்பினார்.. இப்போது ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றுள்ளார், அவரும் இந்திய அணியை மாற்ற விரும்புகிறார்.புதிதாக வருபவர்கள் அனைவரும் பழைய முறையை மாற்ற விரும்புவது ஏன்? இங்கு என்ன சிஸ்டம் பிரச்சனை? இருக்கிறது, என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த உரையாடலில் பதிலளித்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்,
" 2013க்குப் பிறகு இந்திய அணி, பல நாடுகளின் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை என்பதில்தான் பதில் இருக்கிறது என்று நினைக்கிறேன். 2014-ல் யாரும் வந்து எதையாவது மாற்றியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் நாங்கள் இதற்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். இங்கு, 2007 (டி20)க்குப் பிறகு நாங்கள் உலகக் கோப்பையை வென்றதில்லை. எங்களிடம் உலகின் சிறந்த டி 20 லீக் உள்ளது, சிறந்த வீரர்கள், மிகவும் திறமையான வீரர்கள் மற்றும் சிறந்த பெஞ்ச் வலிமையைக் கொண்டுள்ளோம்.
கோப்பைக்கான விஷயங்கள் நடக்கவில்லை என்றால், அணுகுமுறையில் ஏதோ தவறு இருக்கிறது என்று தான் பொருள் படுகிறது. அது மாற வேண்டும்" என்று கூறினார்.