ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறுதல் வெற்றியாவது பெறுமா தென் ஆப்பிரிக்கா? 3-வது டி20 போட்டியில் இன்று மோதல்...!!


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறுதல் வெற்றியாவது பெறுமா தென் ஆப்பிரிக்கா? 3-வது டி20 போட்டியில் இன்று மோதல்...!!
x

image courtesy; ICC

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முதலாவது மற்றும் 2-வது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்ஷ் அரைசதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் சொந்த மண்ணில் தொடரை முழுமையாக இழந்து விட கூடாது என ஆறுதல் வெற்றிக்காக தென் ஆப்பிரிக்க வீரர்கள் வரிந்து கட்டி நிற்பார்கள். எனினும் ஆஸ்திரேலிய அணியின் பக்கமே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.


Next Story