ஐபிஎல்லை விட உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் ..! இந்திய அணி வீரர்களுக்கு கவுதம் கம்பீர் அறிவுரை
ஐபிஎல் தொடரை விட உலகக்கோப்பை தொடர் மிகவும் முக்கியமானது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்தியாவில் இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான அணி சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.கடைசியாக 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணி ஒரு உலகக் கோப்பையை கூட வெல்லவில்லை. இதனால், இம்முறை சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரை விட உலகக்கோப்பை தொடர் மிகவும் முக்கியமானது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது ;
விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்றவர்கள் அவர்களின் இன்னிங்ஸை நிலைத்து ஆட கூடியவர்கள் . சுழற்பந்து வீச்சை நன்றாக ஆடக்கூடியவர்கள் வரவிருக்கும் உலகக் கோப்பையில் முக்கிய பங்கை வகிப்பார்கள் என்று நான் உணர்கிறேன்.
இவர்கள் போன்ற முக்கிய வீரர்கள் 50 ஓவர் உலகக் கோப்பைக்காக, ஒயிட்-பால் கிரிக்கெட்டை போதுமான அளவு விளையாட வேண்டும். டி20 அல்லது ஐபிஎல் போட்டியில் இருந்து ஒய்வு எடுத்து கொள்ளலாம் .
ஒரு முக்கியமான வீரர் ஐபிஎல் போட்டியை தவறவிட்டால், அது பாதிப்பை ஏற்படுத்தாது ., ஏனென்றால் ஐபிஎல் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் . உலகக் கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும். எனவே, ஐபிஎல் தொடரை வெல்வதை விட உலகக் கோப்பையை வெல்வதே எனக்கு முக்கியம் என நினைக்கிறேன்.