பெண்கள் பிரிமீயர் லீக்: பெங்களூரு 155 ரன் சேர்ப்பு...!
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன.
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று முன்தினம் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் தொடரில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தனாவும், ஷோபி டெவைனும் களம் இறங்கினர்.
அதிரடியாக தொடங்கிய பெங்களூரு டெவைன் அவுட் ஆன பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இதில் ஷோபி டெவை 16 ரன், மந்தனா 23 ரன், திஷா கசாட் 0 ரன். எலிஸ் பெர்ரி 13 ரன், ஹெதர் நைட் 0 ரன் என 71 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து ரிச்சா ஹோஷ் மற்றும் கனிகா அனுஜா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இதிக் அனுஜா 22 ரன்னிலும், ரிச்சா ஹோஷ் 28 ரன்னிலும் அவுட் ஆகினட். இதையடுத்து ஸ்ரேயங்கா பாட்டீல், மேகன் ஷட் ஆகியோர் இணைந்தனர். இவர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாகா ஆடிய ஸ்ரேயங்கா 15 பந்தில் 23 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் அந்த அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் ரிச்சா ஹோஷ் 28 ரன், ஸ்ரேயங்கா, மந்தனா தலா 23 ரன்னும் எடுத்தனட். மும்பை அணி தரப்பில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டும், சைகா இஷாக், அமெலியா கெர் அகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆட உள்ளது.