பெண்கள் பிரீமியர் லீக்- பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீச்சு தேர்வு
டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
மும்பை
முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்களை பொறுத்தவரையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கின்றன.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இரவு 7.30 மணிக்கு பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் அலிசா ஹீலே தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணி மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.
Related Tags :
Next Story