தோனியுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் சந்திப்பு...!
ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்தார்.
சென்னை,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன.
இதனிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ள 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதற்காக வீரர்கள் சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்.எஸ். தோனியை சந்தித்தார். சென்னையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ரஷித் கான், தோனியை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணம்' என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story