உலகக்கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து விலகும் ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்.!!


உலகக்கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து விலகும் ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்.!!
x

image courtesy; ICC

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

புது டெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை.

இதில் பங்கேற்றுள்ள முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. பின்னர் எழுச்சி பெற்று தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 4ஆம் தேதி இங்கிலாந்துடன் விளையாட உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.

குஜராத்தில் கோல்ப் வண்டியில் சவாரி செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்தார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார். மேக்ஸ்வெல் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

அதே நேரத்தில், ஆஸ்திரேலியா அணியில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story