உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு..!


உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு..!
x

image courtesy; twitter/ @ICC

உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

புது டெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி அவசியமாகும்.

இந்த தொடரில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட், ரீஸ் டாப்லி

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், பசல்ஹாக் பரூக்கி


Next Story