உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சு தேர்வு


உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சு தேர்வு
x

image courtesy; twitter/@ICC

தினத்தந்தி 9 Oct 2023 1:38 PM IST (Updated: 9 Oct 2023 1:53 PM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து - நெதர்லாந்து இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐதராபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை நெதர்லாந்து எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனூரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோப் வான் டெர் மெர்வே, ரியான் க்ளீன், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்


Next Story