உலகக்கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு...!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
புனே,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் புனேவில் மோத உள்ளன.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணியை டாம் லேதம் வழிநடத்துகிறார்.
Related Tags :
Next Story