உலகக்கோப்பை கிரிக்கெட்; தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இங்கிலாந்து... ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்...!


உலகக்கோப்பை கிரிக்கெட்; தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இங்கிலாந்து... ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்...!
x

Image Courtesy: AFP

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இதில் இந்திய அணி மட்டும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. மீதமுள்ள 3 அரையிறுதி இடத்திற்கு மற்ற அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ள ஆஸ்திரேலியா இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொள்ளும் முனைப்பில் உள்ளது.

அதேவேளையில் 6 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இங்கிலாந்து தனது 2வது வெற்றிக்காக கடுமையாக போராடும் இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.


Next Story