உலகக்கோப்பை கிரிக்கெட்; வெற்றிப்பயணத்தை தொடருமா இந்தியா..? - வங்காளதேசத்துடன் நாளை மோதல்...!


உலகக்கோப்பை கிரிக்கெட்; வெற்றிப்பயணத்தை தொடருமா இந்தியா..? - வங்காளதேசத்துடன் நாளை மோதல்...!
x

Image Courtesy: @JayShah

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் புனேவில் மோத உள்ளன.

இதுவரை 3 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்திய அணி மூன்றிலும் வெற்றி (ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்) பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேவேளையில் 3 ஆட்டங்களில் ஆடியுள்ள வங்காளதேசம் அணி 1 வெற்றி (ஆப்கானிஸ்தான்), 2 தோல்வி (இங்கிலாந்து, நியூசிலாந்து) பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தனது வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேவேளையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்து வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் வங்காளதேச அணி உள்ளது. அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.


Next Story