உலகக்கோப்பை போட்டி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு


உலகக்கோப்பை போட்டி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 8 Oct 2023 1:38 PM IST (Updated: 8 Oct 2023 2:03 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சென்னை,

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருப்பதால் முழு திறமையை வெளிப்படுத்தும். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வுசெய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.


Next Story