அடுத்த தலைமுறையினரை நீ வழி நடத்தி செல்ல வேண்டும்- இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு விராட் கோலி பாராட்டு
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
அகமதாபாத்,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி சும்பன் கில் சதத்தால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார். இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை சுப்மன் கில் பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து விராட் கோலி பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ,
உனக்கு திறமை இருக்கிறது. அடுத்த தலைமுறையினரை நீ வழி நடத்தி செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Instagram story by Virat Kohli about Shubman Gill. pic.twitter.com/X5yDQlgn1t
— Johns. (@CricCrazyJohns) May 16, 2023