தோனியை எந்த ஒரு மனிதராலும் வெறுக்க முடியாது: ஹர்திக் பாண்ட்யா


தோனியை எந்த ஒரு மனிதராலும் வெறுக்க முடியாது: ஹர்திக் பாண்ட்யா
x

நான் எப்போதுமே தோனியின் மிகப்பெரிய ரசிகன் தான். எம்எஸ் தோனியை வெறுக்க வேண்டுமென்றால் முழுமையாக பிசாசாகத்தான் இருக்க வேண்டும் என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி வெளியிட்ட வீடியோவில் ஹர்திக் பாண்ட்யா தோனி பற்றி கூறியிருப்பதாவது:-

நான் எப்போதுமே தோனியின் மிகப்பெரிய ரசிகன் தான். எம்எஸ் தோனியை வெறுக்க வேண்டுமென்றால் முழுமையாக பிசாசாகத்தான் இருக்க வேண்டும். எம்எஸ் தோனியை பலரும் சீரியஸான நபராக இருப்பார் என்று நினைக்கிறார்கள். ஆனால் தோனி ஜாலியான மனிதர். அவர் எப்போதும் என் சிறந்த நண்பர். எப்போதும் என் சகோதரர் போன்றவர்.

அதேபோல் மனிதராகவும், கிரிக்கெட் வீரராகவும் ஏராளமான விஷயங்களை தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அவரை பார்த்தும், அவருடன் பேசியும் ஏராளமான முக்கிய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story