"அதைச் செய்ய அனுமதி இல்லை"- வெஸ்ட் இண்டீஸ் வீரரின் வித்தியாசமான சிக்சருக்கு குவியும் பாராட்டு- வைரல் வீடியோ


அதைச் செய்ய அனுமதி இல்லை- வெஸ்ட் இண்டீஸ் வீரரின் வித்தியாசமான சிக்சருக்கு குவியும் பாராட்டு- வைரல் வீடியோ
x

மேயர்ஸ் அடித்த வித்தியாசமான சிக்சரின் வீடியோவை பகிர்ந்து கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குயின்ஸ்லாந்து,

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைல் மேயர்ஸ் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்தார். இதில் மேயர்ஸ் அடித்த ஒரு சிக்சர் நம்ப முடியாத அளவில் இருந்தது.

4-வது ஓவரின் 2-வது பந்தை கிரீன் வீச அதை எதிர்கொண்ட மேயர்ஸ், ஆப்-ஸ்டம்புக்கு வெளியே வந்த லெந்த் பந்தை எடுத்து, ஸ்வீப்பர் கவர் மீது சிக்ஸர் அடித்தார். வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தொழில்நுட்ப ரீதியாக இவ்வாறு ஒரு சிக்சர் அடிப்பது எளிதான காரியமில்லை. மேயர்ஸ் அடித்த இந்த சிக்சரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் மேயர்சின் இந்த சிக்ஸரை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், மேயர்ஸ் அடித்த சிக்சரின் வீடியோவை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், "அதைச் செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை" என பாராட்டியுள்ளார்.

அதேபோல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கில்கிறிஸ்ட், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆகியோரும் மேயர்ஸை பாராட்டி உள்ளனர்.



Next Story