கயிறாட்டம்


கயிறாட்டம்
x
தினத்தந்தி 12 April 2019 2:58 PM IST (Updated: 12 April 2019 4:01 PM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு மூச்சுமண்டலம் வலுவடையச் செய்கிறது.

சிறுமிகளுக்கு ஏற்ற விளையாட்டு கயிறாட்டம். ஆங்கிலத்தில் ‘ஸ்கிப்பிங்’ எனப்படும் இந்த விளையாட்டு குழந்தைகளின் மூச்சுமண்டலத்தை தூய்மையடையச் செய்யக்கூடியது. உடல் உறுப்புகள் அனைத்தும் நன்கு செயல்படத்தூண்டும். உடற்கழிவுகளை வெளியேற்றும். பெண்களின் கருப்பை வலுப்பெற உதவி செய்யும். இது விளையாட்டு என்பதுடன் சிறந்த உடற்பயிற்சி என்றே கூறிவிடலாம்.

ஊதித்தள்ளும் விளையாட்டும் நமது பாரம்பரியத்தில் இருந்துள்ளது. புளி விதைகளை வட்டத்திற்குள் வைத்து ஊதி ஊதி கோட்டிற்கு வெளியே நகர்த்திவிட்டு அதை தனக்கு உரிமையாக்கி வெற்றி கொள்வது இந்த விளையாட்டு. மூச்சுமண்டலம் வலுவடையச் செய்கிறது இந்த விளையாட்டு. செரிமான சிக்கல்கள் தோன்றாது. புரிந்துணர்வும், சிக்கலை தீர்க்கும் மதி நுட்பமும் வேலை செய்யும்.

இன்று இந்த விளையாட்டுகளில் பல மறக்கடிக்கப்பட்டு விட்டன. நகர வளர்ச்சியும், செல்போன் விளையாட்டுகளும் அதற்கு முக்கிய காரணமாகும். கோடை நேரத்தில் ஸ்மார்ட்போனில் விளையாடுவதையும், வெயிலில் விளையாடுவதையும் தவிர்த்து, மதியையும், உடலையும் வளமாக்கும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வோம்.


Next Story