கால்பந்து

நான் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை: நீதிமன்றத்தில் ரொனால்டோ வாதம் + "||" + Football: Ronaldo denies tax fraud at court hearing

நான் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை: நீதிமன்றத்தில் ரொனால்டோ வாதம்

நான் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை: நீதிமன்றத்தில் ரொனால்டோ வாதம்
நான் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை என்று நீதிமன்றத்தில் பிரபல கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சம்பளம் மற்றும் விளம்பரம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். அவர் கிளப் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடுகிறார். 

இதற்காக அவர் பெரும் தொகையை ஊதியமாக பெற்று வருகிறார். 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுக்கு உட்பட்ட காலகட்டத்தில் ரொனால்டோ ஸ்பெயினில் சம்பாதித்த பணத்துக்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றும் ரூ.102 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து இருப்பதாகவும் புகார்கள் கிளம்பின.இதனை ரொனால்டோ மறுத்தார். 

ஆனால் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் முடிவில் ஸ்பெயின் அரசு வக்கீல் அலுவலகம் சார்பில் ரொனால்டோ மீது வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஐரோப்பிய நாடான ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நீதிமனத்தில் ஆஜரான ரொனால்டா, எந்த வரி ஏய்ப்பிலும் நான் ஈடுபடவில்லை என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். 

மேலும், நான் எப்போதுமே, தானாக முன்வந்து எனது வரிக்கணக்குகளை தாக்கல் செய்து வந்திருப்பதாகவும், எனது வருமானத்திற்கு ஏற்ற வகையில் உரிய வரி செலுத்தி வருவதாகவும், பிரச்சினை இருக்க கூடாது என்பதால், இன்றைய தேதி வரை உரிய முறையில்  அனைத்து வரிகளையும் செலுத்திவருவதாகவும் ரொனால்டோ தெரிவித்ததாக அவருக்காக ஆஜரான ஏஜென்சி தெரிவித்துள்ளது.