கால்பந்து

நடுவரை தள்ளி விட்ட ரொனால்டோவுக்கு 5 போட்டிகளில் விளையாட தடை + "||" + Cristiano Ronaldo Pushes The Referee

நடுவரை தள்ளி விட்ட ரொனால்டோவுக்கு 5 போட்டிகளில் விளையாட தடை

நடுவரை தள்ளி விட்ட ரொனால்டோவுக்கு 5 போட்டிகளில் விளையாட தடை
போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 5 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை போட்டியில்   மெஸ்ஸியின் பார்சிலோனா அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவின் ரியல் மாட்ரிட் அணி 3-1 என வெற்றிப்பெற்றது.

போட்டியில் இரண்டாவது கோல் அடித்த ரொனால்டோ தனது ஜெர்சியை கழற்றி கொண்டாடினார்.

இதனையடுத்த போட்டியின் போது விதிமுறைகளுக்கு புறம்பாக விளையாடியதாக நடுவரால் சிகப்பு அட்டை காட்டி, ரொனால்டோ வெளியேற்றப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரொனால்டோ நடுவரை கையால் தள்ளினார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம், அபராதத் தொகையுடன் ஐந்து போட்டிகளில் விளையாட அவருக்கு தடைவிதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ரொனால்டோவுக்கு 10 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், ரொனால்டோவால் சர்வதேச சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட முடியும், ஆனால், 20 செப்டம்பர் ரியல் பெட்டிஸுக்கு எதிரான போட்டி வரை ரியல் மாட்ரிட் அணிக்கு திரும்பமாட்டார். இதனால், ரியல் மாட்ரிட் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.