கால்பந்து

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணி வெற்றி + "||" + Asian Cup Football qualifying round

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணி வெற்றி

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று:
இந்திய அணி வெற்றி
2019-ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
மக்காவ்,

இதில் மக்காவ் நாட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மக்காவ் அணியை எதிர்கொண்டது. உலக தரவரிசையில் 96-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக தரவரிசையில் 183-வது இடத்தில் உள்ள மக்காவ் அணிக்கு எதிராக தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினாலும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

மாற்று வீரராக களம் கண்ட இந்திய வீரர் பல்வந்த் சிங் 57-வது மற்றும் 82-வது நிமிடங்களில் கோல் அடித்தார். மக்காவ் அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் மக்காவ் அணியை தோற்கடித்து 3-வது வெற்றியை ருசித்து தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. ஆசிய போட்டியின் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பில் இந்திய அணி நீடிக்கிறது. சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.