கால்பந்து

உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயின், ஐஸ்லாந்து அணிகள் தகுதி + "||" + World cup football Spain and Iceland qualify

உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயின், ஐஸ்லாந்து அணிகள் தகுதி

உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயின், ஐஸ்லாந்து அணிகள் தகுதி
ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
இஸ்தான்புல்,

இதில் ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் இஸ்தான்புல்லில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் ஐஸ்லாந்து அணி 3-0 என்ற கணக்கில் துருக்கியை வீழ்த்தி உலக போட்டிக்கு தகுதி பெற்றது.

இதேபோல் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தி தனது பிரிவில் முதலிடம் பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. இத்தாலி-மாசிடோனியா அணிகள் இடையிலான இன்னொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இத்தாலி அணி நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணி பிளே-ஆப் சுற்றில் வெற்றி பெற்றால் தகுதி பெற முடியும்.