கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணியை வீழ்த்தியது பெங்களூரு + "||" + ISL Football Bengal defeated Pune team

ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணியை வீழ்த்தியது பெங்களூரு

ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணியை வீழ்த்தியது பெங்களூரு
ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி.
புனே,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேயில் நேற்றிரவு நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி- பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த மோதலில் 35-வது நிமிடத்தில் புனே வீரர் ஈசாக் தட்டிக்கொடுத்த பந்தை சக வீரர் அடில்கான் பாய்ந்து தலையால் முட்டி கோலாக்கி அட்டகாசப்படுத்தினார். முதல் பாதியில் புனே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.


பிற்பாதியில், 56-வது நிமிடத்தில் புனே வீரர் பல்ஜித் சைனி 2-வது முறையாக மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்குள்ளானார். இரண்டு மஞ்சள் அட்டை என்பது சிவப்பு அட்டைக்கு சமம் என்பதால் அவர் வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் புனே அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி பெங்களூரு வீரர் மிகு 64 மற்றும் 74-வது நிமிடங்களில் கோல் போட்டு அசத்தினார். கடைசி நிமிடத்தில் பெங்களுரு நட்சத்திர வீரர் சுனில் சேத்ரியும் தனது பங்குக்கு ஒரு கோல் அடித்தார். முடிவில் பெங்களூரு எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணி 4 வெற்றி, ஒரு தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. 6-வது ஆட்டத்தில் ஆடிய புனேவுக்கு இது 3-வது தோல்வியாகும்.

இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் இரவு 8 மணிக்கு மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் இன்று மோத உள்ளன.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு - ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது தோல்வி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணி 2-வது முறையாக தோல்வியடைந்தது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி-புனே ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், டெல்லி-புனே இடையேயான ஆட்டம் டிரா ஆனது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா-கவுகாத்தி அணிகள் இடையிலான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’வில் முடிந்தது.