கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரள அணி முதல் வெற்றி + "||" + ISL Football Kerala team first win

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரள அணி முதல் வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரள அணி முதல் வெற்றி
4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கொச்சியில் நேற்றிரவு அரங்கேறிய 24-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதின.
கொச்சி,

உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் இறங்கிய கேரள அணி 24-வது நிமிடத்தில் கோல் போட்டது. சக வீரர் ரினோ ஆண்டோ கடத்திகொடுத்த பந்தை சி.கே. வினீத் தலையால் முட்டி கோலாக்கினார். 43-வது நிமிடத்தில் கோல் பகுதியில் வைத்து கேரள வீரர் மார்க் சிப்னியாசை தள்ளிவிட்டதால், கவுகாத்தி கோல் கீப்பர் ரெஹனேஸ் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் கவுகாத்தி அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் பிறகு இரு அணிகளும் பலவாறு முயற்சித்தும் கோல் விழவில்லை. முடிவில் கேரளா 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் அவ்வப்போது முரட்டு ஆட்டமும் தலைதூக்கியது. 80-வது நிமிடத்தில் இரு தரப்பு வீரர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.


இன்றைய ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்- எப்.சி.கோவா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி போராடி தோல்வி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணி போராடி தோல்வியடைந்தது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? - இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் இன்று இரவு சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் ‘டிரா’
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னை அணி முதல் வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 4-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.