கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையிடம் வீழ்ந்தது கவுகாத்தி + "||" + ISL Football: Guwahati fell to Mumbai

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையிடம் வீழ்ந்தது கவுகாத்தி

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையிடம் வீழ்ந்தது கவுகாத்தி
4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கவுகாத்தியில் நேற்றிரவு அரங்கேறிய 28–வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி– நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதின.

கவுகாத்தி,

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கவுகாத்தியில் நேற்றிரவு அரங்கேறிய 28–வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி– நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில் மும்பை சிட்டி அணி 2–0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தியது. மும்பை வீரர் பல்வந்த் சிங் இரட்டை கோல் ( 34 மற்றும் 68–வது நிமிடம்) அடித்தார். 7–வது ஆட்டத்தில் ஆடிய மும்பை சிட்டிக்கு இது 3–வது வெற்றியாகும். கவுகாத்தி அணி சந்தித்த 4–வது தோல்வியாகும்.

இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.– ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.