கால்பந்து

பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்தது, ஜாம்ஷெட்பூர் + "||" + The Bangalore team was shocked, Jamshedpur

பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்தது, ஜாம்ஷெட்பூர்

பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்தது, ஜாம்ஷெட்பூர்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 29–வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 1–0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.க்கு அதிர்ச்சி அளித்தது.

பெங்களூரு,

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 29–வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 1–0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.க்கு அதிர்ச்சி அளித்தது. இந்த ஆட்டம் ‘டிரா’வை நோக்கி நகர்ந்த நிலையில், கடைசி நிமிடத்தில் பெங்களூரு வீரர் ராகுல் பெகே, எதிரணியின் மாற்று ஆட்டக்காரர் சமீக் டோட்டியை கோல் பகுதியில் வைத்து கீழே தள்ளியதால் ஜாம்ஷெட்பூர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. இந்த வாய்ப்பை ஜாம்ஷெட்பூர் வீரர் டிரின்டேட் கோன்கல்வ்ஸ் கோலாக்கினார். சொந்த மண்ணில் பெங்களூரு அணி அடுத்தடுத்து தழுவிய 2–வது தோல்வி இதுவாகும். மொத்தத்தில் 7–வது ஆட்டத்தில் விளையாடி 3–வது தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதே சமயம் 6–வது லீக்கில் விளையாடிய ஜாம்ஷெட்பூர் அணிக்கு இது 2–வது வெற்றியாகும்.