கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை பந்தாடியது மும்பை + "||" + ISL Football Mumbai is the boundary of Delhi

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை பந்தாடியது மும்பை

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை பந்தாடியது மும்பை
மும்பையில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து 34-வது லீக் ஆட்டத்தில் டெல்லியை பந்தாடியது மும்பை அணி.
மும்பை,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி, டெல்லி டைனமோசை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக களம் புகுந்த மும்பை அணி 4-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை பந்தாடியது. லூசியன் கோயன் (12-வது நிமிடம்), எவர்டோன் சான்டோஸ் (43, 49-வது நிமிடம்), பல்வந்த்சிங் (79-வது நிமிடம்) ஆகியோர் மும்பை அணியில் கோல் போட்டனர். பந்து 57 சதவீதம் டெல்லி அணியின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை.

8-வது லீக்கில் ஆடிய மும்பை அணி 4 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வி என்று 13 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணிக்கு இது 6-வது தோல்வியாகும.

இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் புனே சிட்டி- கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.