கால்பந்து

பிரேசில் வீரர் காட்டினோவை இழுக்க ரூ.1,200 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது பார்சிலோனா + "||" + Barcelona signed a contract worth Rs 1,200 crore

பிரேசில் வீரர் காட்டினோவை இழுக்க ரூ.1,200 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது பார்சிலோனா

பிரேசில் வீரர் காட்டினோவை இழுக்க ரூ.1,200 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது பார்சிலோனா
பிரேசில் கால்பந்து அணியின் நடுகள அதிரடி ஆட்டக்காரர் 25 வயதான பிலிப் காட்டினோ இங்கிலாந்தின் லிவர்புல் கிளப் அணிக்காக விளையாடி வந்தார்.

பார்சிலோனா,

பிரேசில் கால்பந்து அணியின் நடுகள அதிரடி ஆட்டக்காரர் 25 வயதான பிலிப் காட்டினோ இங்கிலாந்தின் லிவர்புல் கிளப் அணிக்காக விளையாடி வந்தார். அந்த கிளப்பில் இருந்து அவரை ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப் தங்கள் பக்கம் இழுத்துள்ளது. இதற்காக லிவர்புல் கிளப்புக்கு ரூ.1,200 கோடி வழங்க பார்சிலோனா ஒப்பந்தம் செய்துள்ளது. இன்னொரு கிளப்பில் இருந்து ஒரு வீரரை பெறுவதற்கு செய்யப்பட்ட 3–வது அதிகபட்ச ஒப்பந்த தொகை இதுவாகும்.

இனி அவர் பார்சிலோனா கிளப்புக்காக விளையாடுவார். இந்த கிளப்புடனான ஒப்பந்த காலத்தில் அவர் இருக்கும் போது, எந்த கிளப்பாவது அவரை தங்கள் அணிக்காக விளையாட வைக்க விரும்பினால் அதற்கு ரூ.3 ஆயிரம் கோடி பார்சிலோனாவுக்கு கொடுக்க வேண்டியது இருக்கும்.