கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது ஜாம்ஷெட்பூர் + "||" + Jamshedpur fell to Goa

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது ஜாம்ஷெட்பூர்

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது ஜாம்ஷெட்பூர்
4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், நேற்றிரவு கோவாவில் நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- ஜாம்ஷெட்பூர் எப்.சி.அணிகள் மோதின.
கோவா,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், நேற்றிரவு கோவாவில் நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- ஜாம்ஷெட்பூர் எப்.சி.அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது. கோவா அணியில் இரண்டு கோலையும் மானுல் லான்ஜரோட் (45 மற்றும் 60-வது நிமிடம்) அடித்தார். ஜாம்ஷெட்பூர் அணியில் கோன்கால்வ்ஸ் (54-வது நிமிடம்) கோல் திருப்பினார். இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கவுகாத்தி-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.