கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து:சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தது கவுகாத்தி + "||" + ISL Football: Chennai team Shock gave Guwahati

ஐ.எஸ்.எல். கால்பந்து:சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தது கவுகாத்தி

ஐ.எஸ்.எல். கால்பந்து:சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தது கவுகாத்தி
4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கவுகாத்தியில் நேற்றிரவு அரங்கேறிய 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி., கவுகாத்தி அணியை (நார்த் ஈஸ்ட் யுனைடெட்) எதிர்கொண்டது
கவுகாத்தி,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கவுகாத்தியில் நேற்றிரவு அரங்கேறிய 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி., கவுகாத்தி அணியை (நார்த் ஈஸ்ட் யுனைடெட்) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் பெரும்பாலான நேரம் பந்து சென்னை வீரர்கள் வசமே (61 சதவீதம்) சுற்றிக்கொண்டிருந்தது. ஆனால் கோல் அடிப்பதில் கவுகாத்தியின் கை ஓங்கியது. அந்த அணியின் செய்மின்லென் டான்ஜெல் 42, 46, 68-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் போட்டு சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார். ஆறுதல் அளிக்கும் வகையில் 79-வது நிமிடத்தில் சென்னை வீரர் அனிருத் தபா ஒரு கோல் திருப்பினார்.


முடிவில் கவுகாத்தி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை சாய்த்து 3-வது வெற்றியை பெற்றது. 5 ஆட்டங்களுக்கு பிறகு சென்னை அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். மொத்தத்தில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி 6 வெற்றி, 2 டிரா, 3 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் லீக்கில் புனே சிட்டி-கொல்கத்தா அணிகள் மல்லுகட்டுகின்றன.