கால்பந்து

கிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்த வீடியோ வைரலாகி வருகிறது + "||" + Selfie diagnosis! Cristiano Ronaldo uses Real Madrid doctor’s mobile phone to check head injury

கிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்த வீடியோ வைரலாகி வருகிறது

கிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்த வீடியோ வைரலாகி வருகிறது
ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நேற்று நடந்த போட்டி ஒன்றில் படுகாயமடைந்தார்.அதன் பின்னர், கைப்பேசியில் தனது முகத்தை அவர் பார்த்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.#CristianoRonaldo

லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி, நேற்று டிபோரிடிவோ அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த ரியல் மாட்ரிட், 5-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.போட்டியின் 83-வது நிமிடத்தின் போது, டிபோரிடிவோ அணி வீரர் பபியன் சசர்  பந்தை உதைக்க முயன்ற போது, அவரின் கால் ரொனால்டோவின் முகத்தில் பலமாக பட்டது.

இதனால் படுகாயமடைந்த ரொனால்டோவின் முகத்தில் ரத்தம் கசிந்தது. இதனைத் தொடர்ந்து, மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேறினார் ரொனால்டோ. அப்போது, உதவியாளரின் கைப்பேசியை வாங்கிய ரொனால்டோ, தனது முகத்தில் எந்த அளவில் காயம் ஏற்பட்டுள்ளது என்று பார்த்தார். 

இந்த வீடியோவை டுவிட்டர் சமூக வலைதளத்தில், பலர் கிண்டல் செய்யும் வகையில் பகிர்ந்து வருகின்றனர்.இப்போட்டியில் ரியல் மேட்ரிட் அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மேலும், ரொனால்டோ 2 கோல்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.