கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரிடம் வீழ்ந்தது மும்பை + "||" + ISL Football: Mumbai fell to Jamshedpur

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரிடம் வீழ்ந்தது மும்பை

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரிடம் வீழ்ந்தது மும்பை
4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 61–வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 2–1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தி 6–வது வெற்றியை பதிவு செய்தது.

மும்பை,

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 61–வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 2–1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தி 6–வது வெற்றியை பதிவு செய்தது. முதல்கோலை 37–வது நிமிடத்தில் சுயகோலாக (மும்பை வீரர் சஞ்சு பிரதான் காலால் பந்தை தடுத்த போது அது வலைக்குள் சென்றது) பெற்ற ஜாம்ஷெட்பூர் அணி 2–வது கோலை 84–வது நிமிடத்தில் அடித்தது. இந்த கோலை பிகாஷ் ஜெய்ரு போட்டார். இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புனே சிட்டி–கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.