கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து:கடைசி நிமிட கோலால் கேரளா வெற்றி + "||" + ISL Football: Kerala's victory over the last minute goal

ஐ.எஸ்.எல். கால்பந்து:கடைசி நிமிட கோலால் கேரளா வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து:கடைசி நிமிட கோலால் கேரளா வெற்றி
4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 62-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- புனே சிட்டி அணிகள் சந்தித்தன.
புனே,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 62-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- புனே சிட்டி அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை. 58-வது நிமிடத்தில் கேரளாவின் ஜாக்கிசந்த்சிங் கோல் அடித்தார். 78-வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பை புனே வீரர் எமிலியானோ அல்பாரோ கோலாக மாற்றினார். இதையடுத்து ‘டிரா’வை நோக்கி நகர்ந்த ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் கேரளாவின் சி.கே.வினீத் கோல் போட்டு கேரளாவுக்கு 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை தேடித்தந்தார். 14-வது லீக்கில் ஆடிய கேரளாவுக்கு இது 5-வது வெற்றியாகும். புனே சிட்டிக்கு 5-வது தோல்வியாகும். இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.