கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 11–வது வெற்றி + "||" + ISL Football: Bengal team is the 11th winner

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 11–வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 11–வது வெற்றி
4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூருவில் நேற்றிரவு அரங்கேறிய 68–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2–0 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவாவை வீழ்த்தியது.

பெங்களூரு,

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூருவில் நேற்றிரவு அரங்கேறிய 68–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2–0 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவாவை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் எடு கார்சியா (35–வது நிமிடம்), டிமாஸ் டெல்காடோ (82–வது நிமிடம்) கோல் அடித்தனர். 15–வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணி 11 வெற்றி, 4 தோல்வி என்று 33 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிப்பதுடன், அரைஇறுதி சுற்றையும் நெருங்கியது. கோவா அணிக்கு இது 5–வது தோல்வியாகும். இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்– கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.