கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? + "||" + ISL Football: Goa team Will Chennai be retaliated?

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?
நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் 73–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–எப்.சி. கோவா அணிகள் மல்லுகட்டுகின்றன.

கோவா,

10 அணிகள் இடையிலான 4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் 73–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–எப்.சி. கோவா அணிகள் மல்லுகட்டுகின்றன.

முன்னாள் சாம்பியனான சென்னை அணி 14 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 டிரா, 4 தோல்வி என்று 24 புள்ளிகளுடன் பட்டியலில் 4–வது இடம் வகிக்கிறது. கோவா அணி 13 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 2 டிரா, 5 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் 6–வது இடத்தில் இருக்கிறது. லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால் இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவுகளும் முக்கியமானது.

சென்னை அணி எஞ்சியுள்ள 4 லீக் ஆட்டங்களில்குறைந்தது 2–ல் வெற்றி பெற்றால் தான் அரைஇறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் 2–3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டிருந்த சென்னை அணி அவர்களது இடத்தில் பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.