கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து சென்னை அணி 9–வது வெற்றி பெறுமா? ஜாம்ஷெட்பூர் அணியுடன் இன்று மோதல் + "||" + ISL Football Chennai team Will the 9th win?

ஐ.எஸ்.எல். கால்பந்து சென்னை அணி 9–வது வெற்றி பெறுமா? ஜாம்ஷெட்பூர் அணியுடன் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து சென்னை அணி 9–வது வெற்றி பெறுமா? ஜாம்ஷெட்பூர் அணியுடன் இன்று மோதல்
4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சென்னை,

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கும் 76–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான சென்னை அணி 15 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 டிரா, 4 தோல்வியுடன் 27 புள்ளிகள் பெற்று 3–வது இடத்தில் உள்ளது. அறிமுக அணியாக ஜாம்ஷெட்பூர் 7 வெற்றி, 4 டிரா, 4 தோல்வியுடன் 25 புள்ளிகள் பெற்று 4–வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசிப்படுத்தி கொள்ள முடியும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக ஆக்ரோ‌ஷமாக மல்லுக்கட்டும். சொந்த மண்ணில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 0–1 என்ற கணக்கில் சென்னையிடம் தோல்வி கண்டது. அதற்கு பதிலடி கொடுக்க அந்த அணி முழு முயற்சி மேற்கொள்ளும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

கொல்கத்தாவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் (77–வது) ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, மும்பை சிட்டி எப்.சி. அணியை எதிர்கொள்கிறது. 14 ஆட்டங்களில் ஆடி இருக்கும் கொல்கத்தா அணி 3 வெற்றி, 4 டிரா, 7 தோல்வியுடன் 8–வது இடத்தில் உள்ளது. மும்பை அணி 5 வெற்றி, 2 டிரா, 7 தோல்வியுடன் 7–வது இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது என்பது முடிந்து போன கதையாகும். மும்பை அணியை பொறுத்தமட்டில் நூலிழை வாய்ப்பு இருக்கிறது எனலாம். இரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் கொல்கத்தா அணி 4 முறையும், மும்பை அணி 3 முறையும் வென்றுள்ளன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.அதிகம் வாசிக்கப்பட்டவை