கால்பந்து

லா லிகா கால்பந்து ரியல் மாட்ரிட் அணி 13-வது வெற்றி + "||" + La Liga Football Real Madrid team 13 th victory

லா லிகா கால்பந்து ரியல் மாட்ரிட் அணி 13-வது வெற்றி

லா லிகா கால்பந்து ரியல் மாட்ரிட் அணி 13-வது வெற்றி
லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 5-3 என்ற கோல் கணக்கில் ரியல் பெடிஸ் அணியை வீழ்த்தி 13-வது வெற்றியை ருசித்தது.
பார்சிலோனா,

லா லிகா லீக் கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி, ரியல் பெடிஸ் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரியல் பெடிஸ் அணியின் கட்டுப்பாட்டில் தான் பந்து அதிக நேரம் வலம் வந்தது. இருப்பினும் ரியல் மாட்ரிட் அணி முதல் கோலை அடித்தது. 11-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் மார்கோ அசென்சியோ இந்த கோலை அடித்தார்.


இதனை அடுத்து துடிப்புடன் ஆடிய ரியல் பெடிஸ் அணி 33-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் அய்சா மான்டி இந்த கோலை அடித்தார். ரியல் பெடிஸ் அணி வீரர் அடித்த பந்தை ரியல் மாட்ரிட் வீரர் நாஷோ பெர்னாண்டஸ் (37-வது நிமிடம்) தடுக்கையில் அது சுயகோலாக மாறியது. இதனால் முதல் பாதியில் ரியல் பெடிஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பின்பாதியில் ஆதிக்கம் செலுத்திய ரியல் மாட்ரிட் அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்தது. ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் செர்ஜியோ ரமோஸ் 50-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இதனை அடுத்து ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் மார்கோ அசென்சியோ 59-வது நிமிடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 65-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

ரியல் பெடிஸ் அணி வீரர் செர்ஜியோ லியோன் 85-வது நிமிடத்தில் கோல் திருப்பினார். கடைசி நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி வீரர் கரின் பென்சிமா கோல் அடித்தார். முடிவில் ரியல் மாட்ரிட் அணி 5-3 என்ற கோல் கணக்கில் ரியல் பெடிஸ் அணியை வீழ்த்தி 13-வது வெற்றியை ருசித்து புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பெற்றுள்ளது.

இதுவரை 24 லீக் ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பார்சிலோனா அணி 19 வெற்றி, 5 டிராவுடன் தோல்வியை சந்திக்காமல் 62 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் அணி 16 வெற்றி, 7 டிரா, ஒரு தோல்வியுடன் 55 புள்ளிகள் பெற்று 2-வது இடமும், வெலென்சியா அணி 14 வெற்றி, 4 டிரா, 6 தோல்வியுடன் 46 புள்ளிகள் பெற்று 3-வது இடமும் வகிக்கின்றன.