கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் டிரா + "||" + I.s.l Football: Chennai-Kerala Dance Draw

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் டிரா
80-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
கொச்சி,

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 80-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் மாறி மாறி கோல்வலையை முற்றுகையிட்டபடி இருந்தாலும் முதல்பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

பிற்பாதியில், 52-வது நிமிடத்தில் கேரள வீரர் பால்ட்வின்சன் கோல்நோக்கி முன்னேறிய போது, சென்னை வீரர் ஜெர்ரி அவரை பிடித்து இழுத்துவிட்டார். இதனால் கேரள அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

இந்த பொன்னான பெனால்டி வாய்ப்பை கேரளா வீரர் கோரஜ் பெகுசன் வீணாக்கினார். அவர் உதைத்த பந்தை சென்னை கோல் கீப்பர் கரன்ஜித்சிங், வலதுபக்கமாக பாய்ந்து சூப்பராக தடுத்து நிறுத்தினார். அதன் பிறகு இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. கடைசி நிமிடத்தில் சென்னை வீரர் கிரிகோரி நெல்சன் அடித்த ஷாட் கம்பத்தில் பட்டு ஏமாற்றியது.

முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிரா ஆனது. 17-வது லீக்கில் ஆடிய சென்னை அணி 8 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி என்று 29 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. கேரள அணி 6 வெற்றி, 7 டிரா, 4 தோல்வியுடன் 25 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. சென்னையின் எப்.சி. தங்களது கடைசி லீக்கில் வருகிற 3-ந்தேதி மும்பை சிட்டி அணியை எதிர்கொள்கிறது. அரைஇறுதியை வாய்ப்பை எட்டுவதற்கு இந்த ஆட்டத்தில் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் சந்திக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் மாநில கூடைப்பந்து போட்டி
சென்னையில் மாநில கூடைப்பந்து போட்டி தொடங்க உள்ளது.
2. பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
3. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
5. சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.