கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து புனே அணியை பந்தாடியது கோவா + "||" + Isl football goa team win against pune team

ஐ.எஸ்.எல். கால்பந்து புனே அணியை பந்தாடியது கோவா

ஐ.எஸ்.எல். கால்பந்து புனே அணியை பந்தாடியது கோவா
கோவா அணி 4-0 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை அந்த சொந்த மண்ணிலேயே பந்தாடியது.
புனே,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்று மாலை புனேயில் அரங்கேறிய 82-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 4-0 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை அந்த சொந்த மண்ணிலேயே பந்தாடியது. கோவா அடித்த 4 கோல்களில் இரண்டு பெனால்டி வாய்ப்பில் கிட்டியது. 16-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 7 வெற்றி, 3 டிரா, 6 தோல்வி என்று 24 புள்ளிகளுடன், பட்டியலில் 6-வது இடத்தில் இருப்பதுடன் அரைஇறுதி வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது. 29 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கும் புனே அணிக்கு இது 6-வது தோல்வியாகும்.


புவனேசுவரத்தில் இரவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி 12-வது வெற்றியை பதிவு செய்தது.


தொடர்புடைய செய்திகள்

1. கோவாவில் இருந்து சென்னை திரும்பினார் அஜித், புதிய படத்துக்காக தயாராகிறார்
கோவாவில் இருந்து சென்னை திரும்பிய அஜித், புதிய படத்துக்காக தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. கோவா: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் தங்களது பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க.வில் இணைந்தனர்.
3. கோவா முதல் மந்திரி பொறுப்பில் இருந்து மனோகர் பாரிக்கரை மாற்ற பாஜக முடிவு என தகவல்
கோவா முதல் மந்திரி பொறுப்பில் இருந்து மனோகர் பாரிக்கரை மாற்ற பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.