கால்பந்து

லீக் கோப்பை கால்பந்துமான்செஸ்டர் சிட்டி அணி ‘சாம்பியன்’ + "||" + League cup football Manchester City team 'champion'

லீக் கோப்பை கால்பந்துமான்செஸ்டர் சிட்டி அணி ‘சாம்பியன்’

லீக் கோப்பை கால்பந்துமான்செஸ்டர் சிட்டி அணி ‘சாம்பியன்’
இங்கிலாந்தில் நடந்த லீக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
லண்டன், 

கிளப் அணிகளுக்கு இடையிலான லீக் கோப்பை கால்பந்து போட்டி இங்கிலாந்தில் நடந்தது. 92 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் பட்டம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மான்செஸ்டர் சிட்டி-அர்செனல் அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் அணியின் கையே தொடக்கம் முதலே ஓங்கி இருந்தது. 18-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் செர்ஜியோ அகுரோ இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

மான்செஸ்டர் அணி ‘சாம்பியன்’

பின் பாதி ஆட்டத்திலும் மான்செஸ்டர் சிட்டி அணியின் ஆதிக்கமே நீடித்தது. 58-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணி வீரர் வின்செண்ட் கோம்பானி 2-வது கோலை அடித்தார். 65-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் டேவிட் சில்வா 3-வது கோலை திணித்தார். இதனால் மான்செஸ்டர் சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

பதில் கோல் திருப்ப அர்செனல் அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை தோற்கடித்து ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது. மான்செஸ்டர் அணி கோப்பையை வெல்வது இது 5-வது முறையாகும்.

காயத்தால் விலகல்

இறுதிப்போட்டியின் முதல் பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணியின் நடுகள வீரர் பெர்னாண்டினோ காயம் அடைந்து வெளியேறினார்.