கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து:மும்பை அணியை பந்தாடியது டெல்லி + "||" + ISL Football: Delhi is the one that has played the Mumbai team

ஐ.எஸ்.எல். கால்பந்து:மும்பை அணியை பந்தாடியது டெல்லி

ஐ.எஸ்.எல். கால்பந்து:மும்பை அணியை பந்தாடியது டெல்லி
ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழாவில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை பந்தாடியது.
புதுடெல்லி,

ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழாவில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை பந்தாடியது.

ஐ.எஸ்.எல். கால்பந்து

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இந்த நிலையில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 84-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ், மும்பை சிட்டி அணிகள் சந்தித்தன. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் புகுந்த மும்பை அணிக்கு 5-வது நிமிடத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லி அணியின் நந்தகுமார் சேகர், சக வீரர் சேத்யாசென் சிங் தட்டிக்கொடுத்த பந்தை எளிதில் கோலாக்கினார். பதில் கோல் திருப்ப மும்பை வீரர்கள் கடுமையாக முயன்றும் முதல் பாதியில் பலன் இல்லை.


பிற்பாதியில் ஆட்டத்தில் அனல் பறந்தது. 49-வது நிமிடத்தில் மும்பை வீரர் எவர்டோன் சான்டோஸ் கோல் அடித்து சமனுக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு தாக்குதலை தீவிரப்படுத்திய டெல்லி அணியினர் அடுத்தடுத்து கோல்களை பொழிந்து, எதிரணியை திகைப்படைய வைத்தனர். 74-வது நிமிடத்தில் மேத்யாஸ் மிராபாஜ், 81-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் மானுவல் அரனா, 85-வது நிமிடத்தில் கலு உச்சே, 90-வது நிமிடத்தில் சாங்டே ஆகியோர் கோல் போட்டனர். இதற்கிடையே, டெல்லி வீரர் பிரதிக் சவுத்ரி (77-வது நிமிடம்), மும்பை வீரர் சஹில் தவோரா (80-வது நிமிடம்) ஆகியோர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

மும்பை தோல்வி

இந்த ஆட்டத்தில் டெல்லி அணியை காட்டிலும் மும்பை வீரர்களே இலக்கை நோக்கி (13 முறை) அதிகமான ஷாட்டுகளை துல்லியமாக அடித்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. முடிவில் டெல்லி அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை ஊதித்தள்ளியது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட டெல்லி அணிக்கு இது 5-வது வெற்றியாகும்.

அதே சமயம் இந்த தோல்வியின் மூலம் மும்பை அணியின் அரைஇறுதி கனவு ஏறக்குறைய தகர்ந்து போனது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கோவா-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.