ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் பணிந்தது கொல்கத்தா


ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் பணிந்தது கொல்கத்தா
x
தினத்தந்தி 28 Feb 2018 9:00 PM GMT (Updated: 28 Feb 2018 8:54 PM GMT)

கோவா அணியின் வெற்றியின் மூலம் கேரளா பிளாஸ்டர்சின் (25 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனது.

கோவா,

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 85–வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி 5–1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை துவம்சம் செய்தது. செர்ஜியோ ஜஸ்ட், மானுல் லான்ஜரோட் (2), கோரோமினாஸ், மார்க் சிப்னியாஸ் ஆகியோர் கோவா அணியில் கோல் போட்டனர். கோவா அணியின் வெற்றியின் மூலம் கேரளா பிளாஸ்டர்சின் (25 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனது.

கோவா அணி 17 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 டிரா, 6 தோல்வி என்று 27 புள்ளிகளுடன் 4–வது இடத்தில் இருக்கிறது. கோவா அணி வருகிற 4–ந்தேதி நடக்கும் கடைசி லீக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை (26 புள்ளி) சந்திக்கிறது. இதில் கோவா அணி ‘டிரா’ செய்தாலே 4–வது அணியாக அரைஇறுதியை எட்டி விடலாம். ஜாம்ஷெட்பூர் வெற்றி பெற்றால் அந்த அணி அரைஇறுதி அதிர்ஷ்டத்தை தட்டிச்செல்லும். ஏற்கனவே பெங்களூரு, புனே சிட்டி, சென்னையின் எப்.சி. அணிகள் அரைஇறுதியை உறுதி செய்து விட்டன.


Next Story