கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து:அரைஇறுதிக்கு முன்னேறியது கோவா அணிசென்னையின் எப்.சி.யுடன் மோதுகிறது + "||" + ISL Football: The Goa team advanced to the semi-finals

ஐ.எஸ்.எல். கால்பந்து:அரைஇறுதிக்கு முன்னேறியது கோவா அணிசென்னையின் எப்.சி.யுடன் மோதுகிறது

ஐ.எஸ்.எல். கால்பந்து:அரைஇறுதிக்கு முன்னேறியது கோவா அணிசென்னையின் எப்.சி.யுடன் மோதுகிறது
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி அரைஇறுதியை எட்டிய கோவா அணி, அடுத்து சென்னையின் எப்.சி.யுடன் மல்லுகட்டுகிறது.
ஜாம்ஷெட்பூர்,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி அரைஇறுதியை எட்டிய கோவா அணி, அடுத்து சென்னையின் எப்.சி.யுடன் மல்லுகட்டுகிறது.

அரைஇறுதியில் கோவா அணி

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. ஜாம்ஷெட்பூரில் நடந்த 89-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. அரைஇறுதிக்கு தகுதி பெறும் 4-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் ஆட்டமாக இது அமைந்ததால் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

இதில் தொடக்கம் முதலே பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து (69 சதவீதம்) முழுமையாக ஆதிக்கம் செலுத்திய கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை எளிதில் வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. கோவா அணியில் கோரோமினாஸ் (29, 51-வது நிமிடம்), மானுல் லான்ஜரோட் (69-வது நிமிடம்) கோல் போட்டனர். இரவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வென்றது.

லீக் சுற்று முடிவில் பெங்களூரு எப்.சி. (40 புள்ளி), சென்னையின் எப்.சி (32 புள்ளி), கோவா (30 புள்ளி), புனே சிட்டி (30 புள்ளி) ஆகிய அணிகள் டாப்-4 இடங்களை பிடித்து அரைஇறுதியை எட்டின. ஜாம்ஷெட்பூர் 26 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.

சென்னையின் எப்.சி.யுடன்...

அரைஇறுதி ஆட்டங்களில் சென்னையின் எப்.சி- எப்.சி.கோவா, பெங்களூரு-புனே சிட்டி அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அரைஇறுதியும் தலா இரண்டு ஆட்டங்கள் கொண்டது. உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோத வேண்டும்.

அதாவது சென்னை- கோவா அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று 10-ந்தேதி கோவாவிலும், இதன் 2-வது சுற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் 13-ந்தேதியும் நடைபெறுகிறது. இவ்விரு ஆட்டங்களில் அதிக வெற்றி பெறும் அணி அல்லது சமநிலை நீடித்தால் கோல் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

பெங்களூரு-புனே சிட்டி அணிகள் இடையிலான அரைஇறுதி சுற்று ஆட்டங்கள் வருகிற 7-ந்தேதியும், 11-ந்தேதியும் நடக்கிறது.