கால்பந்து

ஐ லீக் கால்பந்து மினர்வா பஞ்சாப் அணி சாம்பியன் + "||" + I League Football Minerva Punjab Team Champion

ஐ லீக் கால்பந்து மினர்வா பஞ்சாப் அணி சாம்பியன்

ஐ லீக் கால்பந்து மினர்வா பஞ்சாப் அணி சாம்பியன்
ஐ லீக் கால்பந்து போட்டியில் மினர்வா பஞ்சாப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பஞ்சுகுலா,

ஐ.எஸ்.எல். போன்று ஐ லீக் கால்பந்து போட்டியும் இந்தியாவில் பிரபலமானதாகும். இந்த சீசனுக்கான ஐ லீக் கால்பந்து போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டன. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் எப்.சி.-சர்ச்சில் பிரதர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சர்ச்சில் பிரதர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் முடிவில் மினர்வா பஞ்சாப் அணி 35 புள்ளிகளுடன் (18 ஆட்டங்களில் ஆடி 11 வெற்றி, 2 டிரா, 5 தோல்வியுடன்) முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. நிடோகா அணி 32 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தது. சென்னை சிட்டி அணி 8-வது இடம் பெற்றது.