கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் அரைஇறுதி சுற்று: சென்னை-கோவா அணிகள் இன்று பலப்பரீட்சை + "||" + ISL The semi-final round of football competition

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் அரைஇறுதி சுற்று: சென்னை-கோவா அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் அரைஇறுதி சுற்று: சென்னை-கோவா அணிகள் இன்று பலப்பரீட்சை
சென்னையின் எப்.சி.- எப்.சி.கோவா அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று கோவா நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
கோவா, 

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று முடிவில் பெங்களூரு எப்.சி. (40 புள்ளி), சென்னையின் எப்.சி. (32 புள்ளி), எப்.சி.கோவா (30 புள்ளி), புனே சிட்டி (30 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.- எப்.சி.கோவா அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று கோவா நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டங்களில் ஒன்றில் சென்னை அணி 1-0 கணக்கிலும், மற்றொன்றில் கோவா 3-2 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றன. சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறுகையில், ‘புள்ளி பட்டியலில் நாங்கள் 2-வது இடத்தை பிடித்தது விபத்து அல்ல. கோவாவையும், புனேயையும் அதன் சொந்த இடங்களிலேயே வீழ்த்தி ஏற்றம் கண்டோம். அரைஇறுதிக்கு நாங்கள் எல்லா வகையிலும் தயாராக உள்ளோம்’ என்றார். சென்னை அணி ஜெஜெ லால்பெகுலாவையும் (7 கோல்), கோவா அணி மானுல் லான்ஜரோட்டையும் (12 கோல்) தான் அதிகமாக நம்பி உள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இதற்கிடையே கொல்கத்தாவில் நடைபெற இருந்த இறுதிப்போட்டி பெங்களூருவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.